அனுபவங்கள் Phoenix, Arizona, USA 47-1221 1என்னை இன்றைக்குக் கொண்டுவந்தது எது என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அதைப்பற்றி... என்னை மிகவும் பெலவீனப்படுத்த முயற்சி செய்தது. நான் எவ்வாறு பெலவீனப்படுகிறேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை. நான் ஒரு கூட்டத்தை வைக்கும் பொழுதெல்லாம்... நான் - நான் ஒருபோதும் வியாதியுள்ளவனாக இருக்க விரும்ப வில்லை. என்னுடைய ஜீவிய சரித்திரத்தை, நான் சொன்னதை ஒவ்வொருவரும் கேட்டு அறிந்திருக்கின்றீர்கள். எவ்வாறு அது காரணமாக இருந்தது, காய்ச்சல் அதற்குக் காரணமாக இருந்தது. புகைப்பிடிப்பது இன்னும் மற்றவைகளை நான் செய்யாமல் ஒரு வாலிப மனிதனாக இருந்தபோது, காய்ச்சல் அதற்கு காரணமாயிருந்தது. மேலும், நான் -நான் வியாதியுள்ளவனாக இருக்க விரும்பவில்லை ..?... (ஒலிநாடாவில் காலியிடம்) தேவனுக்காக, ஒவ்வொன்றையும் செய்கிறேன். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தேன், அது என்னை உடைத் திருக்கிறது...? அது இவ்வாறு விளையாட்டுகளை வெளியில் இழுக்கிறது...?... அங்கே வெளியில் இவ்வாறாக என்னை இழுத்துக் கொண்டு..?... (ஒலிநாடாவில் காலியிடம்). அது ஏன் இருந்தது என்று நான் ஆச்சரியமடைந்தேன். என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிலநேரங்களில் நான் மிகவும் பெலவீனப்பட்டு, நான் முழுவதுமாக வெளியே கடந்து போவதை நீங்களும் அறிவீர்கள். என்னை வெளியே எடுத்துச் செல்வார்கள். ஒருவேளை பல மணி நேரங்களுக்கு முன்பே நானும் கூட தெளிவடைந்து அல்லது சுயநினைவுக்கு வந்து தவறு என்னவாக இருந்தது என்று அறிந்து கொள்வதற்கு...?.... நான் நினைக்கிறேன். சிறிதளவே அதைப்பற்றி....?... (ஒலிநாடாவில் காலியிடம்). 2அதைக்குறித்து நான் அதிக உத்தமத்தோடு இருந்தேன். அதன்பேரில் நான் அதிகமான யோசனையில் இருந்தேன். அதன்மேல் என்னுடைய சிந்தையை அதிகமாக வைத்தேன். “நீ, ஜான் டோவினுடைய குழந்தைக்காக ஜெபி, அதைக்குறித்து மறந்துவிடு, அதை சுகமாக்குவது தேவனுடைய வேலையாக இருக்கிறது, என்றார். ”அதன் மீது நீ அதிக உத்தமமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்“ அவ்வாறு நீ அதைச் செய்யும்போது, உனக்கு ஒரு மன உலைச்சல் உண்டாகியிருக்கப்போகிறது” என்று கூறினார். என் சுபாவமானது அப்படியல்ல நல்லது, அதிகமாக அதையையே நினைத்துக் கொண்டிருப்பதைப் போன்று. ஆனால் நான்... அந்தக் காரியத்தைக் குறித்து நான் மறந்துவிடவேண்டும் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் அவர்களுக்காக அதிக உத்தமமாக இருந்தேன். தேவனுடைய வேலையைக் குறித்து நீங்கள் அதிக உத்தமம் அடைய முடியும் என்று நான் நம்பவில்லை . அதுசரியாய் இருக்கிறது. நீங்கள் அதிக உத்தமத்தோடு இருக்கின்ற போது. தேவன் உங்களை சிறப்பாக வழி நடத்த முடியும். எனவே நான்... நான் மன உலைச்சலுக்கு உள்ளாகிவிடலாம் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் நானோ... - நானோ தொடர்ந்து சென்று கொண்டே இருந்தேன். என்னை அறிந்துள்ள உங்களில் அநேகர், முதல் முறையாக நான் இங்கு இருந்தது முதற்கொண்டு, என்னுடைய சிந்தையில் காரியங்கள் நிலைத்திருக்க, நான் முயற்சி செய்வேன். அவர் அநேகமாக நான் பிறப்பதற்கு முன்பாகவே தெய்வீக சுகமளித்தலைக் குறித்துப் பிரசங்கம் செய்து வருகிறார். மேலும் நான் அவரை இருபத்தி ஏழு வயதிலேயே பார்த்திருக்கிறேன். இருந்தும், என்னுடைய தொடக்கத்தை விடவும், பிறகு அதிக தேவை நிறைந்ததாயிருந்தது ...?.... இப்பொழுது நான் பார்த்த பிறகு, ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு இரவிலும் ஒரு கூட்டத்தை வைக்க அவரால் முடியும் என்று அவர் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். 3அது என் உயிரையே எடுக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன். நல்லது, அது ஏன் அப்படி என்று என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நான் பெற்றுக் கொண்டேன் என்று நான் அறிந்திருக்கிறேன். மேலும், “அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார்” என்று சகோதரன் பாஸ்வர்த்தும் கூறினார். அது எங்களை சகோதரர்களாக்கியது. மேலும் தேவன் ஒருவரே எங்கள் இருவரையும் இரட்சித்தார். பின்பு அவர் ஏன் என்னைப் பிடித்துக்கொண்டார் என்றும், என்னால் ஏன் பிடித்துக்கொள்ள முடியவில்லை என்றும் நான் ஆச்சரியமடைந்தேன். மேலும், “நல்லது, எனக்கு இருப்பதைப் பார்க்கிலும் கொஞ்சம் அதிகமான பரிசுத்த ஆவி அவருக்கு இருக்கக்கூடும் என்று நான் நினைத்தேன். பின்பு நான் நினைத்தேன்... நல்லது அந்த விதமாகத்தான், அந்த விதமாகத்தான் நான் என்னை, அதனுடன் தேற்றிக் கொண்டேன். மேலும் நான், “நல்லது, நான் இன்று ஜெபிக்கப்போகிறேன், இந்தக் கூட்டத்திற்கு நான் போகும்போது தேவன் எனக்கு அதிகமான பரிசுத்த ஆவியை கொடுக்கவில்லை என்றால் நான் அதிகமாகப் பற்றிக்கொள்ள முடியும்” என நினைத்தேன். எனவே கடந்த இரவு, இவ்வாராதனைகளில் அற்புதங்கள் செய்யப்பட்ட போதும் கூட, நான் உண்மையில் சற்று அப்படியே இருந்தேன். 4நான் வீட்டிற்குச் சென்றேன். எனக்கு அன்பானவர்களிடம் நான் - நான் எதையும் கூறவில்லை. ஆனால் இந்தக் காலையில் நான் சீக்கிரமாக எழுந்தேன். நான் வெளியில் பாலைவனத்திற்குச் சென்று நான் அதைக் குறித்துத்தானே பேசினேன். என்னால் அதை விளங்கிக் கொள்ள இயலவில்லை. அவர் புரிந்துகொண்டார். அவர் - அவர் அதைக் குறித்து அனைத்தையும் அறிவார். எனவே வெளியில் அங்கே பாலைவனத்தில் ஜெபித்துக் கொண்டிருந்த போது, கொஞ்ச நேரம் பொறுத்து, ஒரு ஜெபத்திற்குப் பிறகு, அது ஒருபோதும் என்னை நீங்கள் கேட்பது போல கேட்கக்கூடிய சத்தமாக இல்லை , அந்தவிதமாக சிலசமயங்களில் அவர் பேசுவது உண்டு. ஆனால் ஏதோவொன்று இவ்வாறாக இறங்கி வந்து இவ்வாறு அது கூறினது போன்று அது அப்படியாக காணப்பட்டது. மேலும் அது என்னவாக இருந்தது என்று என்னுடைய மனதில் என்றென்றுமாக அது அப்படியே பதிந்து விட்டது. ஏதோவொன்று “அந்த மனிதர்கள் வார்த்தையைக் கொண்டு பிரசங்கித்தனர். இதுவோ ஒரு வரமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களுடைய சொந்த விசுவாசத்தைச் சார்ந்து கொள்கிறார்கள். இதுவோ ஒரு வரத்தைக் கொண்டதாய் இருக்கிறது. அப்படித்தான் நானும், என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்” என்று கூறியது. இப்பொழுது நான் அந்த வரம் அல்ல. நீங்கள் பாருங்கள். வரங்கள் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். (அது உண்மையாய் இருக்கிறது) அது இந்த உலகத்தில் இருக்கிறது. ஆனால் வரம் என்பது பரலோகத்திலிருந்து தேவன் கீழே அனுப்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதன் பிறகு இது, ஒரு மனித சரீரத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு அல்லது தேவன் விரும்புகிற ஏதாவது ஒன்றின் மீது அது வைக்கப்படுகிறது. ஒரு நாளில் அது ஒரு கம்பத்தின் மீது வைக்கப்பட்ட வெண்கல சர்ப்பமாக அவருடைய தெரிந்தெடுத்தலாக இருந்தது.... (ஒலிநாடாவில் காலியிடம்) 5(அநேகமாக டிசம்பர் மூன்றாம் தேதியிடப்பட்ட ஒலிநாடாவின் இந்த பகுதியானது ஒரு அடையாளம் கண்டு கொள்ள முடியாத செய்தியிலிருந்து இங்கு அச்சிடப்பட்டுள்ளது - ஆசி) உங்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். இப்பொழுது, நாம் நின்று கொண்டிருக்கிற வேளையில் இன்னுமாக, நீங்கள் விரும்பினால் நமது தலைகள் வணங்கிய நிலையில் கொஞ்ச நேரம் ஜெபத்திற்காக அப்படியே நின்று கொண்டு இருப்போம். எங்கள் பரலோக பிதாவே, இன்றிரவுக்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனென்றால் இந்த பீனிக்ஸ் கூட்டத்தில், நித்தியத்தின் இக்கரையில், நாங்கள் ஒன்றாக சந்தித்து, உம்மைத் தொழுது கொள்வதற்கு மற்றொரு மணிவேளைக்கு அனுமதிக்கப் பட்டிருக்கிறோம். தேவனுடைய மகிமைக்காக, அநேக பெரிய மகத்தான காரியங்கள் நிறைவேறத்தக்கதாக இன்றிரவில் நீர் எங்களோடு இருக்கும்படி, பிதாவே நாங்கள் ஜெபிக்கின்றோம். இப்பொழுது இங்கே திவ்ய பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொரு வரையும் ஆசீர்வதியும். இந்த ஆராதனையையும், இந்த சுகமளித்தலையும் ஆசீர்வதியும். ஓ, தேவனே, கிரையம் கொடுத்து மீட்கப்பட்ட தேவசபைகள் அனைத்தும் இரட்சிக்கப்பட்டு இனி பாவம் செய்யாதபடி அபிவிருத்தி அடையுமட்டும் இயேசுவின் நாமம் வளரட்டும். பிதாவே இதை அருளும். எங்களையும் இந்த ஆராதனையின் பகுதியையும், பிதாவே இப்பொழுது ஆசீர்வதியும். இதை உம்முடைய குமாரன் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம், ஆமென். 6இப்பொழுது மறுபடியும் இன்றிரவில் இங்கு நான் நின்று கொண்டிருப்பதைவிடவும், எனக்கு வேறு எந்த இடமும் தெரியவில்லை. நான் பரலோகத்தின் இந்தப்பக்கத்திலேயே இருப்பேன். நான் உங்கள் எல்லாரையும் சந்தித்து, நாளை இரவு, நாளை இரவோடு ஒரு வருடமாகிறது. நான் இங்கு வந்தபோது, நான் ஆச்சரியப்பட்டேன். ஒரு ஸ்பானிய சபைக்கு நான் போகப் போகிறேன் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். மேலும் நான் நினைத்தேன், “நல்லது, அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ” என்று நான் கற்பனை செய்து கொண்டேன். ஆனால், இந்த இதயம் கனிந்த வரவேற்பு எனக்கு கிடைத்த போது, நான் எப்போதும் மறுபடியும் திரும்பி வரவேண்டும் என விரும்பினேன். எனவே, இப்பொழுது மூன்று இரவுகளுக்கு நமக்கு இங்கே ஆராதனை இருக்கிறது. அதன்பிறகு, ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சபையினருடன் ஆராதனை இருக்கிறது, அது சன்னிலோப் என அழைக்கப்படுகிறது என நம்புகிறேன். அதன்பிறகு திங்கள் கிழமை அல்லது பதினொன்று மற்றும் பன்னிரெண்டு தேதிகளில் கீழே பழைய மெக்ஸிகோவில், டிஜீவானாவிலும் ஆராதனை இருக்கிறது. மேலும், எல்லா இடங்களிலும் உள்ள நாடுகளை அழைக்கும்படிக்கு எனக்குக் கொஞ்சம் அதிகமான நேரங்கள் உண்டாயிருக்க விரும்புகிறேன். மேலும் இது என்னுடைய விடுமுறை காலமாக இருக்கிறது. நான் கடந்த வாரம் நான் மியாமியில் இருந்தேன். மேலும் மியாமியில் ஒரு அமைதியான ஆராதனையை அவர்கள் கொண்டிருந்தனர். குறிப்பாக கடந்த இரவு நான் மிகவும் சோர்வாக இருந்தேன். அநேகமாயிர மக்கள் வரிசையைக் கடந்து சென்றனர். ஒரு மகத்தான கிரியையை தேவன் மியாமியில் நடப்பித்தார். அது... 7பின்பு, அவர்கள் என்னிடம் வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுக்குமாறு கூறினார்கள். ஏனென்றால், இது ஒரு கடினமான நிலையாக இருக்கிறது. மறுபடியும் பென்சகோலாவில் இருப்பதற்கு இப்பொழுது, இருப்பத்தி ஒன்பதாம் தேதியே நான் தொடங்க வேண்டும். மேலும் அங்கு ஐந்து இரவுகள் அங்கு இருப்பேன். அங்கே மக்கள் உள்ளே அமர்வதற்கு மண்டபம் இல்லாத காரணத்தால் அங்கே அவர்கள் இரண்டு பெரிய சர்க்கஸ் கூடாரத்தை ஒன்றாக இணைத்து வைத்துள்ளனர். அதன் பிறகு அங்கிருந்து போவதற்கு நான்கு நாட்கள் ஆகலாம். கன்சாஸ் பட்டணத்தில் இருக்கும் நகராட்சி மண்டபத்திற்குச் செல்ல கன்சாஸ் பட்டணத்திற்கு இரண்டாயிரம் அல்லது அதற்கும் அதிகமான மைல்கள் ஆகலாம் என நான் ஊகிக்கிறேன். அதன்பிறகு அங்கிருந்து டோப்பிகாவுக்கும் மறுபடியும் இல்லினாயிஸ், எல்ஜினுக்கும் அதன்பிறகு சிக்காகோ சென்று அதன்பிறகு வெளிவந்து, வாஷிங்டனுக்கும் மற்றும் கனடாவுக்குள் செல்லவேண்டும். பிறகு நாங்கள் - அந்த ஆராதனைகள் நவம்பர் - நவம்பர் ஐந்தாம் தேதி வரை தொடரும். இன்னும் சரியாகக் கூறவேண்டுமென்றால், அக்டோபர் ஐந்துவரை இருக்கும். அதன்பிறகு அங்கிருந்து மூன்று வாரங்கள் எனக்கு விடுமுறை கிடைக்கும். அதன்பிறகு தொடங்கக்கூடிய அடுத்த இடம் தென் ஆப்ரிக்காவில்தான். பிறகு நான் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் போகவேண்டும். அடுத்த ஆண்டு முழுவதுமே எல்லா ஐரோப்பிய நாடுகளுக்குத்தான். நான் செல்வேன் என்று நான் - நான் நிச்சயத்துள்ளேன்... (ஒலிநாடாவில் காலியிடம்) 8வாழ்க்கையானது எரிந்து போகிறதாயுள்ளது, இன்னும் ஒருவருடமும் கடந்து போய்விட்டது. கடந்த வருடத்தில் கிறிஸ்துவுக்காக அநேகம் செய்யப்பட்டதைக் காணும்படியாகக் கிடைக்கப்பெற்ற அந்த உபரி நேரத்திற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இப்பொழுது நான் அதை நினைக்கையில், நாம் ஒருபோதும் அறிந்திராத அப்படிப்பட்ட ஒரு காலத்தை நாம் எதிர்கொள்கிறோம். தேசங்கள் எல்லா இடங்களிலும் உடைந்து கொண்டிருக்கின்றன. அவைகள் அப்படிப்பட்ட ஒரு - ஒரு பயங்கரமான குழப்பத்திற்குள் இருக்கின்றன. நாம் உண்மையாகவே நேசிக்கின்ற அவர் - இயேசு , வல்லமையில் வருகிறதை நாம் பார்க்கிற வரையிலும், அது தூரத்தில் இல்லை என்று நான் உண்மையிலேயே விசுவாசிக்கிறேன். இந்த வருடத்தில் அவருடைய கிருபையைக் கொண்டும், அவருடைய ஒத்தாசையைக் கொண்டும், முந்தின வருடத்தில் நான் செய்ததைப் பார்க்கிலும் இந்த வருடம் அதிகமானதைச் செய்வதற்கு முயற்சி செய்வதுதான் என்னுடைய தீர்மானமாய் இருக்கிறது. சில... இங்கிருந்து சென்ற பிறகு, வருடத்தின் முடிவு வருகிறது, கடந்த வருடத்தில் மட்டும் என்னுடைய ஆராதனைகளில் இயேசுவின் மூலம், நிச்சயமாக சுகமடைந்த வியாதியஸ்தர்கள் சில முப்பத்து ஐந்தாயிரமாயிருக்கிறது. அது இவ்வாறாக சுகமடைந்து சாட்சிகள் கொடுத்தவர்கள் இல்லாமல் அது மருத்துவரின் அறிக்கையாக இருக்கிறது. எத்தனை நூற்றுக்கணக்கான காரியங்களையுடைய புற்றுநோய்கள், செவிடு, ஊமை, குருடு என்று எனக்குத் தெரியாது. அநேகமாக எல்லாமே. 9இப்பொழுது, இன்றிரவு நாம் - நாம் - நாம் அங்கே பத்து மணிக்கு நிச்சயமாக நாம் ஆராதனைகள் தொடங்குகிறோம். நாளை இரவு... இன்றிரவு கூட்டங்களுக்கு வருவதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாளை இரவு, கூடவே செய்திகளோடும் நாம் தொடர்ந்து சரியாகவே செல்கிறோம். ஒவ்வொரு நாளும் அப்படித்தான். ஒவ்வொரு காலையிலும் பத்து மணிக்கு சகோதரன், கார்சியா ?... தெய்வீக சுகமளித்தலின் பேரில் ஸ்பானிய மக்களுக்கு செய்யவேண்டியதைச் சொல்லுவதற்கு இங்கிருக்கிறார். தங்களுடைய இருதயங்களை கிறிஸ்துவுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறதான அந்த வழியில்..?... ஸ்பானிய மொழியில் புரிந்துகொள்ளக் கூடிய மக்கள் அனைவருமே அந்த ஆராதனைக்காக வாருங்கள். ஒருவேளை இங்கு நானும் வரமுடியும். அநேகமாக இன்றிரவு ஆராதனைகளுக்கும்...... இந்த நேரத்தில், என்னுடைய ஒரு விருந்தினரை சற்று அறிமுகம் செய்து வைக்க நான் விரும்புகிறேன். தெய்வீக சுகமளித்தலின் பேரில் வேதாகமத்தின் அதிகாரத்தில் மிகுந்த அதிகாரமுடைய ஒருவர் என்று நான் ஊகிக்கிறேன். பல ஆண்டுகளாக ஐக்கிய நாடுகளில் இருக்கிறவர், நான் எழுப்பப்பட்டதை உங்களில் அநேகர் அறிந்திருப்பீர்கள்...?... அதுதான் அதைச் செய்தது .?... நான் சிறிய பையனாக இருந்த போது அவருடைய புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்த போது, அவரை எப்போதாவது சந்திப்பேன் என்று நான் நினைத்தும் கூட பார்த்தது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பாக அவர் பரலோகம் சென்றுவிட்டார் என்று நான் கேள்விப்பட்டேன். ஆனால் இந்த அருமையான சகோதரியையும், சகோதரனையும் மியாமியில் இன்னொரு நாள் சந்தித்தேன். அவர்கள் இந்த என்னுடைய கூட்ட ஆராதனைகளில் அமர்ந்துள்ளனர். அதன்பிறகு மற்ற என்னுடைய நண்பர்களோடு இருக்கவும் அல்லது சந்திப்பதற்கான சந்தர்ப்பத்துக்கு ?... அங்கே.... அவர் கடந்த ஞாயிறு அன்று என்னை சந்தித்தார். 10உங்களில் அநேகர் அவரை அறிவீர்கள். அவர் இங்கு வந்து மக்களிடம் “ஹலோ” என்று கூறுமாறு நான் விரும்புகிறேன். அதை ஸ்பானிய மொழியில் அவரால் பேசமுடியாது என்று நான் நம்புகிறேன், எனவே அதை அவர் ஆங்கிலத்திலும் கூட சொல்லவேண்டும். அதுதான் டாக்டர்.எஃப். எஃப்.பாஸ்வர்த், டாக்டர். எஃப்.எஃப். பாஸ்வர்த் அவர்களை இங்குள்ள எத்தனை பேர் கேள்விப்படிருக்கின்றீர்கள்? சரி. சகோதரன். பாஸ்வர்த், வாருங்கள் ஐயா. (சகோதரன் பாஸ்வர்த் பேசுகிறார் - ஆசி). நன்றி, சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, உயர்ந்த ஒழுக்கத்தை உடைய ஒரு மனிதன் கூறின அந்த வார்த்தைகள், எனக்கு ஒரு நல்ல உணர்வை உண்டாக்கியது. நான் நினைக்கிறேன். நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டு வருகிறார் என்று நான் ஊகிக்கிறேன். ஆகவே அது மிகவும் அதிகாரபூர்வமான ஒன்று அப்படித்தானே? 11ஆகவே, இப்பொழுது அங்கே மிகக்குறைந்த ஒரு சிலர் மட்டுமே ஜெபித்துக் கொள்ளும்படியாக, இன்று இரவில் இருக்கின்றனர். இங்கே இருக்கும் எத்தனை பேர் ஆங்கில மொழியைப் புரிந்து கொண்டு, உங்கள் கரங்களை உயர்த்தி, “ஜெபித்துக் கொள்ளும்படியாக நான் இங்கிருக்கிறேன் என்று கூறுவீர்கள். ஜெபித்துக் கொள்வதற்காக இருக்கின்ற உங்களுடைய கரங்களை நாங்கள் பார்க்கட்டும். நல்லது, முழுவதுமாக ஒரு சிலராக அது இருக்கிறது. நிச்சயமாக அங்கே, இருக்கும் சிலருக்குத் தெரியவில்லை ... ஆங்கில மொழி விளங்கவில்லை. மறுபடியுமாக இன்றிரவு இங்கே சில சிறிய பாடல் குழுவினரை பார்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாளை இரவு சிறிது சீக்கிரமாக நான் வந்து, “விசுவாசிப்பாய்” என்ற பாடலை நீங்கள் எனக்காக பாடுவீர்களானால், நான் அதிசயிப்பேன். நீங்கள் ஆங்கில மொழியை புரிந்து கொள்கிறீர்கள். இல்லையா? அது அருமையாய் இருக்கிறது. அது அருமையாய் இருக்கிறது. அது அருமையானது, உங்களுடைய படங்கள் எனக்குக் கிடைத்திருக்கிறது - அவைகள் என்னுடைய வாசிப்பில் உள்ளது. அவைகளை நான் பார்க்கவில்லை. ஆனால் நான் தேவனிடத்தில் என்ன வேண்டுகிறேன் என்றால் இந்த வாலிப ஸ்திரீயை ஆசீர்வதிக்க வேண்டும் என்றுதான். அவள் அருமையாக இருக்கிறாள். கூடவே அங்கேயும் ஒரு சிறிய வாலிப மனிதன் தாழ்ந்த குரலில் பாடினான். இங்கே ஏதோ ஒன்று இருக்கின்றது என்று நான் விசுவாசிக்கிறேன். பாடுவதைக் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. ஆகையால், “ஓ, ஆமாம்” அல்லது அதைப்போன்ற “ஓய்..ஓய்..'' என்ற ஸ்பானிய வார்த்தையை நான் ஒவ்வொரு முறையும் நினைக்கின்றேன். அது அப்படி இல்லையா? அது போன்றதை நான் ஒருபோதும் கேட்டதே இல்லை.... நான் கேட்டது, அல்லது ஏதோவொன்று?. நீங்கள் எல்லாருமே என்னைப் பார்த்து சிரித்து விட்டீர்கள். நிச்சயமாகவே நான் அதைக் கெடுத்து விட்டேன் என்பதை நான் அறிவேன். அதன்பிறகு அங்கே சில காதுகேளாத ஸ்திரீ இருக்கின்றார் என்று நான் கூறினேன். அந்த அதிர்வானது அவளுடைய கரத்தில் வெளியேறியதை நான் உணர்ந்தேன். அவள் சுகமடைந்து விட்டதை நான் அறிந்து கொண்டேன். ஆனால் அவளுக்கு விளங்க வைக்க என்னால் முடியவில்லை. அவள் என்னையே பார்த்துக்கொண்டு புன்னகை புரிந்து கொண்டிருந்தாள். “உன்னால் நான் பேசுவதைக் கேட்கமுடிகிறதா? உன்னால் நான் பேசுவதை கேட்கமுடிகிறதா?” என்று நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். “ஓய்” என்று - அவளிடம் கூறுங்கள் என்று அந்த சிறிய சகோதரன் கூறினார், “ஓ, ஆமாம்” அல்லது அதைப்போன்ற ஏதோ வொன்றை நான் கூறினேன். அது என்னவாக இருந்தது என்று அந்த ஸ்திரீக்குத் தெரியவே இல்லை , அந்த வாலிப ஸ்திரீ சிரித்தாள். நான்... நல்லது எப்படியோ அவள் கேட்கும் திறனைப் பெற்றுக்கொண்டாள், அவள் பெற்றுக்கொள்ளவில்லையா? அது நேர்த்தியானதாய் இருக்கிறது. அது இவ்வாறாக இருந்தது. அது அந்த விதமாக இருந்து அவள் சுகமானாள். “ஓய்” மற்றும் “போனிக்ஸ்” என்ற இரண்டே வார்த்தைகளுடன் நான் அடுத்த வாரம் மெக்ஸிகோவுக்குப் போகிறேன். எவ்விதத்திலாவது, தேவனை அறிந்துள்ள மக்களை நாங்கள் சென்று பார்க்கப் போகிறோம். இப்பொழுது, கொஞ்ச நேரத்திற்கு சுற்றிலும் இருக்கிற ஆங்கிலம் பேசும் மக்களிடத்தில், ஒரு சில நிமிடங்கள் இவ்வாறாகப் பேசவும், இவ்வாறு ஒரு வார்த்தையின் ஒரு சிறிய பகுதியை வாசிக்கவும் நான் விரும்புகிறேன். கேட்பதன் மூலமாகவும் மற்றும் வார்த்தையைக் கேட்பதனாலும் விசுவாசம் வருகிறது என்று நான் நினைக்கிறேன். அது சரியாய் இருக்கிறதா? அந்த வார்த்தையானது... ஒரு குறிப்பிட்ட காரியத்தின் அடிப்படையின் மீது நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை பெறுவீர்களானால்... 12இங்கு அதிக நாட்களுக்கு முன்பு அல்ல, என்னை சபித்துக்கொண்டும், என்மீது துப்பிக் கொண்டும், என்னைக் கடிக்க முற்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மிகக் கொடூரமான பிசாசை ஒரு நேரான மேல் சட்டையில் நான் எதிர் கொண்டேன். நான் அந்தப் பிசாசை சந்திக்கச் சென்றபோது அந்த மனிதனை விடுவிப்பதற்கே கிறிஸ்து மரித்தார் என்னும் அந்த ஒரு காரியத்தை நான் முதலாவதாக அறிந்து கொண்டேன். அது வார்த்தையாய் இருக்கிறது. நான் ஜனங்கள் என்னை விசுவாசிக்கச் செய்து, நான் உத்தமத்தோடு ஜெபிக்கின்றபோது, அந்த ஜெபத்திற்கு முன்பாக எதுவுமே நிற்கமுடியாது என்று கர்த்தருடைய தூதனானவர் அந்த இராத்திரியில் என்னிடத்தில் வந்து என்னிடத்தில் பேசிச் சொன்னார், என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் எனக்கு இரண்டு சாட்சிகள் இருந்தன. பின்பு, இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக அந்த நபரை விட்டு வெளியே வா என்று நான் கேட்க நேர்ந்தது. அந்த மனிதன் அவனுடைய சரியான சிந்தையுடன் சாதாரணமாக வீட்டிற்குச் சென்றான். ஏன்? காரணம் என்னவென்றால், இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உள்ள அதிகாரத்தினால்தான். ஓ, என்னே! பாதாளத்தில் உள்ள ஒவ்வொரு பிசாசும் அந்த நாமத்திற்குக் கீழ்ப்பட்ட தாயுள்ளது. அது சரியாக இருக்கிறது. இயேசு, அது எல்லா நாமங்களுக்கும் மேலான நாமமாயிருக்கிறது. அது மனித உதடுகளின் மூலமாகக் கொடுக்கப்படவில்லை . அந்த பரிசுத்த ஆவியானவர், அந்த மகத்தான காபிரியேல் இறங்கி வந்து, மரியாளிடத்தில் அவருடைய நாமத்தை இயேசு என்று அழைக்கச் சொன்னார். 13முதன்முறையாக அந்த நாமத்தை மனித உதடுகள் உச்சரித்து பின்பு மனித காதுகளுக்குள் சென்றது. ஒரு தாய்க்குள் இருந்த அந்த உயிரற்ற குழந்தையை களிப்பினால் துள்ளப்பண்ணி....?... யோவான் ஸ்நானகன். அது சரியாய் இருக்கிறதா? ஆறுமாதமாக அது உயிரற்று இருந்து, ஜீவனைப் பெற்றுக்கொண்டது. பிறகு இந்த வார்த்தைகள் அவளுக்குள் வந்த உடனேயே...?... அவளது குழந்தை களிப்பினால் துள்ளிற்று. ஒரு மரித்த நபரை அது களிப்பினால் துள்ளச் செய்யுமானால், ஏற்கனவே உயிரோடு இருக்கும் ஒருவருக்கு அது என்ன செய்ய வேண்டும். அதுசரியாய் இருக்கிறதா? இப்பொழுது, பரிசுத்த யோவான் சுவிசேஷத்தில், நான்காவது அதிகாரத்தின், நாற்பத்தி ஆறாவது வசனம் தொடங்கி, இவ்வாறாக சிலவற்றை விளக்கப்போகிறேன். இப்பொழுது, நான் யாரையும் அவசரப்படுத்த விரும்பவில்லை. எப்பொழுதுமே சற்று அமைதலாகவும் சற்று சாந்தமாகவும் பரபரப்பில்லாமலும் இருங்கள். இப்பொழுது, இந்த வரத்தின் மீது அநேக காரியங்கள் பெருகிவிட்டது. முன்பு ஒருமுறை நான் இங்கு இருந்தபோது, நான் அறியாத நிறைய காரியங்களை கடந்த ஆண்டில் நான் கற்றுக்கொண்டேன்.. நிச்சயமாக. நாம் சென்று கொண்டிருக் கையில் அது அப்படியே நகர்ந்து கொண்டே இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். அந்தவிதமாகத்தான் நான் நம்புகிறேன். எவ்வாறாயினும் அவர் செய்வார் என்று நான் - நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, ஒரு நெருக்கமாக நீங்கள் வருகிறவிதமாக, நீங்கள் ஒருபோதும் வரவேண்டாம்… எப்பொழுதுமே அவசரமாக வரவேண்டாம்.....?... (ஒலிநாடாவில் காலியிடம்). 14நான் திரும்பவும் வந்து ஒரு வானூர்தியை அனுப்பி, அங்கே கீழே என்னை மறுபடியும் கொண்டு வந்து, நிச்சயமாக நான் - நான் அதைச் செய்ய இயலாது. எனவே நான் அந்த செயலாளர், அவர்கள் அவரைப் பின்னோக்கி அனுப்பிவிட்டனர். எந்த கடிதங்களுக்கும் அவர் பதிலளித்தார் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. எனவே செயலாளர் அவருக்கு ஒரு உறுமாலை அல்லது வேறுவகையில், ஒரு சிறிய துண்டு நாடாவை அனுப்பினார். ஏனென்றால், நாங்கள் அவைகளை ஒரு வாரத்தில் பல்லாயிரக் கணக்கில் அனுப்பி அதைக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்தினோம். அவர்கள் அதை அந்தக் குழந்தையின் மீது வைத்தார்கள். அந்த இராணுவ மருத்துவரும் கூட அது ஒருபோதும் மறுபடியுமாக இயல்பு நிலையை அடையாது என்று கூறினார். அந்த உறுமால், அக்குழந்தையின் மேல் வைத்ததிலிருந்து நான்கு மணிநேரத்தில், அது திரும்பவும் இயல்பான ஒரு குழந்தை யாயிற்று. பாருங்கள் ? ஓ, தேவனால் சகலத்தையும் செய்ய முடியும். கடந்த இரவு நான் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தேன்... மாலையில் விட்டபிறகு?.. (ஒலிநாடாவில் காலியிடம்) அது என்ன பெயர்? “மரித்துப் போயிருந்த நிலையில் இருந்த ஒருவர் ஜெபத்தின் மூலமாக உயிர்த்தெழுந்தார் என்று அவர்களுடைய சிறிய செய்தித்தாள் ஒன்று கூறிற்று. நான் அவளுக்கு ஒரு உறுமால் அல்லது ஒரு நாடாவை அனுப்பி யிருந்தேன். அவள் புற்றுநோயின் கடைசிக் கட்டத்தில் இருந்தாள். மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவளுடைய மருத்துவர் அவள் நலம் என்று குறிப்பிட்டிருந்தார். அவள் பூரணமாக நலமாயி ருந்தாள். அது ஆராதனை பற்றிய அனைத்திலும் கூறப்பட்டது. அது அப்படியே எல்லா இடங்களிலும் பரவியது. இந்த உறுமால்களைக் கேட்டு ஆயிரக்கணக்கான கடிதங்கள் அவர் களுடைய நாட்டின் பாகங்களிலிருந்து அபரிவிதமாக வந்து குவிந்தது. 15இப்பொழுது, அடுத்த நவம்பர் துவக்கத்தில் (ஒலிநாடாவில் காலியிடம்). சித்தமானால் (ஒலிநாடாவில் காலியிடம்).. வெளிநாட்டு ஊழியங்களில் வடமெரிக்க கண்டத்தைவிட்டு தென்னாப்பிரிக்கா வரையிலும், ஆஸ்திரேலியாவிலிருந்து அங்கே கீழே முழுவதுமாக ஊழியமாக இருக்கும், நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொண்டிருப்பீர்கள், நீங்கள் ஜெபிக்க மாட்டீர்களா? இப்பொழுது, நான் அதைச் செய்வேன். எந்த நேரமானாலும் நான் உங்களுக்காக எதையாவது செய்யக்கூடுமானால் இப்பொழுது,எனக்குக் கடிதங்கள் எழுதுவதிலும், தனிப்பட்ட கடிதங்களும், தனிப்பட்ட கடிதங்களுக்கு ஏன் பதில் எழுத முடியவில்லை என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அவைகள் வருகின்றன. அங்கே நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானவைகள் வருகின்றன. எனவே அவைகளுக்கு நான் தனிப்பட்ட விதத்தில் பதில் எழுத முடிவதில்லை. ஆனால் அவைகள் கவனம் செலுத்தப்படும். 16இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். இந்தக் கைக்குட்டை கள் அவைகளைப் பற்றி, நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். “இப்பொழுது, சகோதரன். பிரன்ஹாம், அவைகளைக் குறித்து என்ன?” உங்களுடைய கடிதமானது ஒரு கடித வடிவிலே இருக்கலாம். உங்களுடைய கடிதத்தின், உங்களுக்காக பதில் செயலாளிடமிருந்தும், ஆனால் உங்களுடைய நாடாவின் மீது தனிப்பட்ட விதத்தில் என்னால் ஜெபிக்கப்பட்டது. இப்பொழுது, நீங்கள் அனைவருமே கவனிப்பீர்களானால், அநேக மக்கள் கடிதத்தை அபிஷேகிக்கின்றனர். கைக்குட்டைகளையும் அபிஷே கிக்கின்றனர். ஆனால் நீங்கள் வேதாகமத்தை பரிசோதிப்பீர் களானால், அவைகள் அபிஷேகமே செய்யப்படவில்லை. அவைகள் பவுலின் சரீரத்திலிருந்து எடுக்கப்பட்டவைகள் (அது சரியாய் இருக்கிறதா?) கைக்குட்டைகள் அல்லது கச்சைகள். இப்பொழுது, அது என்னவாக இருக்கிறது, ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறது. அப்படியே எலியாவைப்போன்று. அவன் தன் தடியை எடுத்துக்கொண்டு, “சென்று அதை அந்த பிள்ளையின் மேல் வை” என்று கேயாசியிடம் கூறினான். அவன் எதைத் தொட்டானோ அது ஆசீர்வதிக்கப்பட்டதாக இருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். “நல்லது, சகோதரன். பிரன்ஹாம் நீங்கள் எப்படி அவ்வாறு அதைச் செய்தீர்கள்?” என்று நீங்கள் கூறலாம். நல்லது. நான் கூட்டங்களில் இருக்கும்போது, நான் கீழே செல்வேன். அவர்கள் எனக்கு நூற்றுக்கணக்கான அரை அங்குல வெள்ளை நாடாக்களை அனுப்பினார்கள். நான் எடுத்து அவைகளைக் கொண்டு போய் பகல் நேரத்தில், அவைகள் ஒவ்வொன்றிற்காகவும், என் கரங்களில் எடுத்துக் கொண்டு, அவைகளுக்காக ஜெபிப்பேன். தேவன் அந்த நபர்களை குணப்படுத்துமாறு ஜெபிப்பேன். அதன்பிறகு, அவைகள் செயலாளருக்கும் வெவ்வேறு அலுவலங்கங்களுக்கும் அனுப்பப் படும். அவர்கள் விரைந்து, உடனே வியாதியஸ்தர்களுக்கு அனுப்புவார்கள். அந்தக் கடிதமானது முறைப்படியான கடிதமா கவும் உள்ளது. ஆனால், அந்த - அந்த நாடாவானது தனிப்பட்ட விதத்தில் ஜெபிக்கப்படுகிறது. ஜெபிப்பதற்கு நான் அறிந்துள்ள எல்லாவிதமான உத்தமத்தோடு தனித்தனியாக ஜெபிக்கிறேன். “எனது குழந்தை உடல் நிலைக்குறைவாய் இருந்தபோது, அதற்கு ஜெபம்பண்ண நான் சில மனிதர்களை அனுப்பினேனேயானால் எப்படி அவர்கள் அதைச் செய்ய நான் எதிர்ப்பார்ப்பேன் என நான் எண்ணுகிறேன். நீங்கள் செய்யமாட்டீர்களா? என்னால் இயன்றவரை நான் முயற்சிக்கிறேன். அதுபோன்று இன்றிரவும், உங்களுடைய ஜெபங்களோடு. 17இப்பொழுது, இதை உரிமை கோருதல்... இப்பொழுது இதுவரை, நான் அறிந்துள்ள வரையிலும் இந்த பிரசங்க பீடத்தைக் கடந்து சென்ற ஒரு நபரைப் பற்றி மாத்திரம் நான் அறிந்திருக்கிறேன். அவர்களிடத்தில் என்ன இருந்ததோ அதிலிருந்து பரிபூரணமாக கொடுக்கப்பட்டதா என்று எனக்கு முழுமையாகத் தெரியாது. அது வலிப்பு நோயுடைய ஒரு வாலிப மனிதன். அவன் பிரசங்கபீடத்தை கடந்து சென்றான். அவனை விட்டுப்போன ஆவி திரும்பவும் வந்தது. அது அவனை திரும்பவும் விட்டுப்போனது. அது திரும்பவும் வந்தது. நல்லது, நான் - நான் அதை மூன்றாவது முறை கூட முயற்சி செய்தேன். அந்த சிறுவன் பிரகாசமடைந்தான். அவன் புன்னகை செய்தான், அவன் சுற்றிலுமாகப் பார்த்தான். ஒரு சொற்ப நேரத்தில், நான் அதை அவன் மேல் பார்த்தேன். இப்பொழுது, நண்பர்களே நீங்கள் அதை அறிந்திருக்கக் கூடும். இப்பொழுது, உண்மையாக கூர்ந்து கவனியுங்கள். நான் இப்பொழுது பெற்றுக்கொள்ளப் போகிறேன். 18(ஒலிநாடாவில் காலியிடம்) ...?... வீடானது தேவனுடைய மகிமைக்கென்று கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, நான் கூறினவிதமாக, கடைசி இராத்திரியாக இது இருக்கிறது. நாம் கொஞ்சம் நேரத்திற்குத்தான் நாம் ஒன்று கூடி இருப்போம் என்று நான் செய்துள்ள இந்த அறிக்கையை நீங்கள் கேட்டீர்கள். அது ஒன்றிலிருந்து அதை விட்டுவிட்டதாக நான் எதையுமே காணவில்லை. அவன் அங்கே தங்கி இருந்தால் நான் அதைச் செய்யக்கூடாது, அந்த நபர் மரிக்கப்போகிறார் என்று நான் அறிந்தால் தவிர நான் அதை வெளிப்படுத்துவேன். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? அதனுடன் தொல்லைக்குள்ளாகி விடமுடியும் என்பதை அறிவீர்களா? மோசே செய்தது உங்களுக்குத் தெரியுமா? மோசேக்கு இரண்டாவது முறை கூட கன்மலையை அடிக்க வல்லமை இருந்தது ஆனால், அது தேவனுடைய சித்தத்திற்கு எதிரானதாக இருந்தது. அவன் தேவனுடைய முழு திட்டத்தையுமே கூட உடைத்து விட்டான். அது சரியாய் இருக்கிறதா? ஆனால் தேவனுக்கு முன்பாக அதைச் செய்ய அவனுக்கு வல்லமை இருந்தது. முதலாவதாக அவன் கன்மலையை அடித்தான், தண்ணீர் வரவில்லை , தண்ணீர் கேட்டு, அவன் அதை மறுபடியும் அடித்தான். மேலும் - மேலும் நான் ஒருபோதும் நினைக்கவில்லை... அவன்..? செய்யவில்லை அது தேவனுடைய சித்தமில்லை என்று நம்மில் அநேகர் அறிந்திருக்கிறோம். ஆனால் அதைச் செய்வதற்கு தீர்க்கதரிசிக்கு வல்லமை இருந்தது. ஆனால் அது அவனை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு இஸ்ரவேல் புத்திரர் போவதிலிருந்து நிறுத்தி வைத்தது. பார்த்தீர்களா? 19இப்பொழுது, அநேக தருணங்களில் இந்தக் காரியங்கள் வெளியே துரத்தப்படும் போது, அவைகள் திரும்ப வந்துவிடுகிறது என்று நான் உணருகிறேன். நான் பயப்படுவதால், நான் - நான் அவைகளை அப்படியே தனியே விட்டுவிடுகிறேன். மேலே பாருங்கள்.... கூட்டங்களில் ஒன்றில் அது சமீபத்தில் வான்கூவரில் ஒரு பார்வை இழந்த பெண் ஜெர்மானியப் பெண் பல ஆண்டுகளாக பார்வையை இழந்திருந்தாள் என்று நான் நம்புகிறேன். அந்தக் குருட்டு ஆவி அவளிடமிருந்து துரத்தப்பட்ட உடனேயே அவள் அங்கு நின்று கொண்டிருந்த தனது மகளைக் காண்பித்து, ஜெர்மானிய மொழியில் பேசத் தொடங்கினாள். அவர்கள் அனைவரும் கூச்சலிட்டுக் கொண்டும் அழுது கொண்டும் இருந்தார்கள். அவள் தன்னுடைய தலையைத் திருப்பி தூரமாக நடந்தாள், அது திரும்பவும் அவள் மேல் சென்றது. அவள் திரும்பி வந்தாள், அது மறுபடியும் துரத்தப்பட்டு அது போனது... அவளால் மறுபடியும் பார்க்க முடிந்தது. அவள் ஆவியில் மிகவும் பெருமை கொண்டு அவள் தூரமாகச் சென்றபோது மறுபடியும் வந்துவிட்டது. (ஒலிநாடாவில் காலியிடம்).... ஒரேவிதமாக இல்லாமல், வெவ்வேறு உபதேசங்களிலிருந்து அந்த ஜனங்கள் வரும்பொழுது (ஒலிநாடாவில் காலியிடம்)... ஆனால் ஒரே இருதயத்தோடும் ஒரே இசைவோடும், ஒவ்வொரு மனிதனும் உங்களை வாழ்த்தட்டும். நீங்கள் ஒரே ஆவியைக் கொண்டும், மற்றும் சரீரத்தின் அவையங்களாகவும் இருக்கும் வரை ... இப்பொழுது இன்றிரவு என்னுடைய சரீரமானது, தன் மேல் ஒரு பெரிய புற்றுநோயுடனோ அல்லது ஒரு பெரிய புண்ணுடனேயோ இயங்க இயலாதது போல அது உள்ளது. அல்லது நான் எங்கேயாவது குழம்பிப் போயிருந்தால், என்னுடைய முழு சரீரமும் பாதிப்படைந்திருக்கும். அது அந்த வழியில் தான் அல்லது அந்த விதமாகத்தான்...?... முழுவதும். 20இப்பொழுது, சபைகளின் ஐக்கியம் வருகின்றது. அது ஏற்கனவே தேசம் முழுவதும் இருக்கிறது. நீங்கள் அறிவீர்கள், நீங்கள்..?... அவர்கள் கூட்டாளிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே இரண்டு பெரிய வல்லமைகள் உலகத்தில் அசைவாடிக் கொண்டிருக்கிறது. சொல்லாமலேயே அவைகள் என்னவாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அவை பல வல்லமைகளைக் கொண்ட ஒரு கூட்டு வல்லமை. மற்றொன்று கத்தோலிக்க மார்க்கமும், கம்யூனிசமும் ஒன்று கூடி வருதல். ஒன்று கிறிஸ்துவுக்கு எதிரானது மற்றொன்று கத்தோலிக்க சபை. அந்த இரண்டு வல்லமைகளும் ஒன்று கூடி வருகிறது, அது... இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்களை ஒருவரோடும் அல்லது மற்றொருவரோடும் எடுத்துக் கொள்வதற்கு ஒரு கட்டாயத்தின் கீழ் வருவார்கள். அப்பொழுதுதான் அந்த சிறிய பரிசுத்த ஆவியின் சபையும் ஒன்றுகூடி வரும் அப்பொழுதுதான் .... (ஒலிநாடாவில் காலியிடம்) குற்றம் காண்போர்களின் அந்த மண்டபம். ஒரு நீண்ட காலமாய் இருக்கும் தேவன் அதை இந்த நாட்களில் ஒன்றில் புகழ்ச்சியின் மண்டபத்தில் தொங்கவிடுவார். துன்புறுத்துதல்கள்.. 21இப்பொழுது, இது முன்னோடியாய் இருக்கிறது.... (ஒலிநாடாவில் காலியிடம்)... இங்கே ஒரு மனிதனிடம் இந்தக் காலையில் பேசிக் கொண்டிருந்தேன். அவர் வேறொரு சபைகளின் சங்கத்தினைச் சேர்ந்த ஒரு ஊழியக்காரன், அவர் இங்கே உள்ளே வந்து மேடையின் மீது நின்றார். நேற்றைய இரவு நமது கூட்டங்களில் எவ்விதமாக பரிசுத்த ஆவி விழுந்தது என்று உங்களுக்குத் தெரியும். அவர் இங்கு அமர்ந்திருந்தார், அவர் வேறொன்றைச் சார்ந்த... “சகோதரனே, அப்படியானால்...'' ”நான், அப்படியே அவர்களோடு களிகூர்ந்தேன்“ என்று அவர் கூறினார். இப்பொழுது, அது அந்தவிதமாகத்தான் செய்யப்படவேண்டும், வேறு ஏதோவொன்றை அது செய்தது என்று அது பிறகு கூறியது. கொஞ்ச நேரத்தில் அப்படியே அது ஒரு - ஒரு புண்படுத்தும் இடமாயிற்று. ஏனென்றால் அவர் ஒரு ஊழியக்காரனாய் இருந்தார். அவர் அந்த சரீரத்தில் இருந்தார். பாருங்கள்? அந்த சரீரத்தின் மேல் அவர் ஒரு வேதனையான நிலையில் இருந்தார். ஆனால் அதற்குப் பதிலாக அவர் அப்படியே தனது ஆவியை உள்ளே அதனோடு கொடுத்திருந்தார். அந்த பரிசுத்த... இப்பொழுது, ஒரு சிறிய மக்களை உடைய குழுவில், இதைப்போன்று, அது கிரியை செய்யுமானால், அது தேவனுடைய சபையில் என்ன கிரியை செய்யும். நீங்கள் பாருங்கள்? நல்லது, அவர்கள் அனைவரும் ஒன்று கூடி வந்தால், என்ன சம்பவிக்கும் என்று கூறுவது கடினம். அது சரியாய் இருக்கின்றதா? ஒரே இடத்தில் எல்லாரும் ஒரே இசைவிலிருக்கையில், மேலே பரலோகத்தில் பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போன்று உண்டாகி அது அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 22சகோதரி கார்சியா, இப்பொழுது நீங்கள் உங்களுடையதை பெற்றுக் கொண்டீர்கள்.... எல்லாரும் ஆயத்தமா? நீங்கள் எல்லாரும் விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியும் (ஒலிநாடாவில் காலியிடம்)... மலையின் மறுபக்கத்தின் மேல் அமர்ந்து கொண்டு, அங்கு இருக்கும் புதர்களுக்கு அடியில் நான் அப்படியே உட்கார்ந்து கொண்டு உங்களை கவனித்துக் கொண்டிருப்பேன். எனவே நான் - நான். எனவே, நீங்கள் அங்கே போகும்போது என்னைப் பாருங்கள். அது மிகவும் அருமையானதாய் இருக்கிறது. நீங்கள் அதை எவ்விதமாக விரும்புகின்றீர்கள்? நல்லது. ஓ, என்னே! இப்பொழுது நமக்கு அதனுடைய சான்று ஒன்று இருக்கிறது, நாம் அந்த சகோதரன் அதைக் கொண்டு வரப்போகிறார். (ஒலிநாடாவில் காலியிடம்). 23(ஒலிநாடாவின் இப்பகுதியானது அடையாளம் காணமுடியாத செய்தியிலிருந்து இங்கு அச்சிடப்பட்டுள்ளது- ஆசி) இது தேவனுடைய வார்த்தை என்று எத்தனைபேர் விசுவாசிக்கின்றீர்கள்? நாம் அனைவரும் செய்கிறோம், நாம் செய்வதில்லையா? எல்லாம் சரி. இப்பொழுது நீங்கள் வைத்துக் கொண்டு இருப்பதில் என்னோடு கூட பரிசுத்த லூக்காவில் ஐந்தாம் அதிகாரத்திற்குத் திருப்புங்கள். நாம் ஜெப வரிசைக்குச் செல்லும் முன்பாக ஒரு சிறிய நன்றாகத் தெரிந்த வேதவசனத்தை வாசித்து அதன் பேரில் அப்படியே ஒரு சொற்ப நேரம் பேசலாம் என்று நாங்கள் விரும்புகின்றோம். இப்போது நாம் வார்த்தையை வாசிக்கும் போதுதானே கூர்ந்து கவனியுங்கள். “பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார். அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி ஆழத்திலே தள்ளிக் கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். அதற்குச் சீமோன் : ஜயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை ; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.” 24ஜெபத்திற்காக சற்றுநேரம், நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமா. எங்கள் பரலோகப் பிதாவே, இன்றிரவில், தேவனுடைய வீடு என்று உம்முடைய நாமத்தில் அழைக்கப் படுகிற இந்த வீட்டில் இருப்பதற்கு நாங்கள் அனுமதிக்கப் பட்டதற்கு இந்த மற்றொரு சந்தர்ப்பத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இது ஒரு திருத்திக்கொள்ளுகிற வீடாகவும், ஒரு புகலிடமாகவும், குற்றஞ்சாட்டப்படுகிற ஒரு இடத்திலே எங்களுடைய குற்றச்சாட்டுகளுக்காக பரிந்து பேசப்படுகிற ஒரு இடமாகவும் இது இருக்கிறது என்றும் நாங்கள் உணருகிறோம். இப்பொழுதும் பிதாவே, நாங்கள் செய்த ஒவ்வொரு பாவத்தையும் நாங்கள் செய்ததான ஒவ்வொரு மீறுதலையும் எங்களுக்கு மன்னித்தருளுமாறு நாங்கள் ஜெபிக்கின்றோம்...